பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ள நிலையில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தொடர் விடுமுறைகள் இருப்பதால் பலரும் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். இதனால் ஜனவரி 12 முதலாக சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் வழியாக 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து தினசரி இயங்கும் 2100 பேருந்துகளை தவிர கூடுதலாக 2010 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொங்கல் என்பதால் இன்று அனைத்து பேருந்து நிலையங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.