பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊருக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப 1187 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக 12 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து 4 நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் வரை பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பஸ்களில் வெளியூர் சென்றிருப்பதாக தகவல் வெளியாகிறது.
இந்த நியையில், மக்கள் இன்று மீண்டும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
எனவே, சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைவிட கூடுதலாக 1187 பேருந்துகள் என மொத்தம் 3287 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.