Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம், பால் விலை உயர்கிறதா?

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம், பால் விலை உயர்கிறதா?
, சனி, 26 மார்ச் 2022 (12:03 IST)
தமிழ்நாட்டில் பஸ் கட்டணம், பால் விலை கணிசமாக உயரக்கூடும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

 
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும் பால் விலை குறைக்கப்பட்டு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆம்,  போக்குவரத்து கழகம் ரூ.48,000 கோடி நஷ்டத்திலும் ஆவின் பால் விலை குறைப்பால் ரூ.270 கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இன்று திருச்சியில் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் நேரு, பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அரசு அதிகாரிகளின் அதிக சம்பளம் காரணமாக பால் விலை, பஸ் கட்டணத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும் என்றும் என விலை உயர்வு குறித்து தெரிவித்தவர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.2,000 தள்ளுபடி விலையில் கிடைக்க போகும் Oppo K10 - மிஸ் பண்ணிடாதீங்க!