Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியே வந்த புதைக்கப்பட்ட பிணம்

Advertiesment
வெளியே வந்த புதைக்கப்பட்ட பிணம்
, சனி, 30 செப்டம்பர் 2017 (19:22 IST)
மேட்டூரில் புகைப்பட்ட பிணம் வெளியே வந்து மழை நீரில் மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டு நேரு நகரில் உள்ள மயானத்தில் புகைப்பட்ட பிணம் மழையால் வெளியே வந்து மிதந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மயானத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
 
பொதுமக்கள் இறந்துபோனவர்களை அடக்கம் செய்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மக்கள் பலமுறை மேட்டூர் நகராட்சிக்கு தெரிவித்தும், நகராட்சி சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம் ஆதரவற்ற பிணம் ஒன்றை நகராட்சி நிர்வாகத்திடம் அடக்கம் செய்ய சொல்லி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
நகராட்சி ஊழியர்கள் முறையாக அடக்கம் செய்யாமல் விட்டதாக கூறப்படுகிறது. மயானத்தில் புகைத்தக்கப்பட்ட பிணம் மழை நீரில் மிதந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை அடித்து துவைத்த பெண் போலீஸ்: வீடியோ!!