Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தை புறக்கணிக்கும் பட்ஜெட்- முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

stalin

Sinoj

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (21:01 IST)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் முடிந்த பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவும் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால பட்ஜெட் பற்றி அமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை!
 
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்ல; குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை; மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் முன்னேற்றம் இல்லை; தமிழ்நாடு எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை!
 
இப்படி இல்லைகள் நிரம்பி வழிந்து, தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்டாக ஒன்றிய பா.ஜ.க அரசின் இடைக்கால #Budget அமைந்துள்ளது. 
 
தமிழ்நாடு அண்மையில் சந்தித்த பேரிடரை ‘தீவிர இயற்கைப் பேரிடர்’ ஆக அறிவிக்க வேண்டும் என்று கோரி, ரூ. 31 ஆயிரம் கோடி நிவாரணத் தொகை
கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.
 
கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ இரயில்திட்டத்திற்கான நிதிக்கு ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்காதது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 இலட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 இலட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் பற்றிக் குறிப்பிட்ட நிதியமைச்சர், உலகமே வியக்கும் வண்ணம்செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை வசதியாக மறந்தது ஏன்?
 
'ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்' ஆகிய நான்கு பிரிவினருக்கு
அதிக நான்கு பிரிவினர்களையும், நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
 
ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத் தக்க பிற் போக்குத்தனமான வருணாசிரம் கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது. அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் 'பறிப்பதுதான்" பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி! சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.
2014-இல் நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆனபோதும், பின்னர் 500,1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும், 2019-ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்த போதும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ஆம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
 
இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது. புதிய இந்தியாவை ‘இந்தியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும். நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்