Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udhayanithi stalin

Sinoj

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (20:49 IST)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் முடிந்த பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவும் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால பட்ஜெட் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

''ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை.
இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு