Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

Prasanth Karthick
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (09:23 IST)

திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உடல் வைத்திருந்த ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் தாக்கி அவரது சகோதரியும் பலியாகியுள்ளார்.

 

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் மின்சாரம் தாக்கியதில் பலியானார். அதை தொடர்ந்து அவரது உடல் இறுதி சடங்கிற்காக ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தது.

 

அவருக்கு இறுதி சடங்கு செய்ய அவரது அக்காள் சுந்தரி என்பவர் உள்பட பல உறவினர்கள் வலங்கைமான் சென்றிருந்தனர். அங்கு குருமூர்த்தி உடல் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சுந்தரி உள்ளிட்ட 7 பேர் மின்சாரத்தால் தாக்கப்பட்டனர்.

 

இதில் சுந்தரி உயிரிழந்த நிலையில், மற்ற 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்பி மின்சாரம் தாக்கி இறந்த நிலையில், இறுதி சடங்கில் அக்காவும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊடுருவல்காரர்களுக்கு எப்படி வாக்களிக்கும் உரிமை வழங்க முடியும்?" ராகுல் காந்திக்கு அமித் ஷா கேள்வி

தாய்லாந்து ராணுவத் தாக்குதல்: கம்போடியாவில் புத்தமத துறவிகள் உள்பட 29 பேர் காயம்

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

சாராயம் விற்ற பணத்தில் தான் முப்பெரும் விழா நடைபெற்றது.. திமுக குறித்த அண்ணாமலை விமர்சனம்..!

விஜய் கூட்டத்தில் பொது சொத்து சேதப்படுத்தப்பட்டால் நீதிமன்றம் தலையிடும்.. தவெகவுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments