Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

Advertiesment
Delta weatherman updates

Prasanth Karthick

, ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (09:31 IST)

தனியார் வானிலை ஆய்வாளர் (டெல்டா வெதர்மேன்) அளித்துள்ள பருவமழை தகவல்களில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றால் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழை குறித்த முன்கூட்டிய ஆய்வு மற்றும் கணிப்புகளை தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.

 

அதன்படி, நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல கிழக்கு காற்று காரணமாக ஏற்படும் மழையை விட காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், புயல்கள் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 

 

மேலும், வட கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திராவில் குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும், இந்த பகுதிகளில் காற்றினால் பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 கால இடைவெளியில் வங்க கடலில் 2 புயல்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. 

 

வடகிழக்கு பருவமழை மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான மழை பொழிவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது கணிக்கப்பட்ட வடகிழக்கு பருவமழை தகவல்களை இந்த மாத இறுதியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!