Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

Advertiesment
மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

Prasanth Karthick

, திங்கள், 23 செப்டம்பர் 2024 (09:52 IST)

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வரும் நிலையில் தற்போது மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்து மொட்டையடித்து அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து சில தினங்கள் முன்பு வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 37 மயிலாடுதுறை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது மேலும் அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் தற்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.
 

 

ஏற்கனவே 37 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தற்போது மேலும் 5 குமரி பகுதி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தொடர் பிரச்சினைக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!