Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திரிக்காய் விலை வீழ்ச்சி.. டிராக்டரை வைத்து செடியை அழிக்கும் விவசாயிகள்..!

Siva
வியாழன், 6 மார்ச் 2025 (15:47 IST)
கத்திரிக்காய் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. மொத்த கொள்முதல் சந்தையில், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.6 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்பனை ஆகுவதால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
 
நடவு, மருந்து, நீர், காய்கறி பறிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளுக்கு கூட  விலை கிடைக்காமல் இருப்பதால், விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். வாகனச் செலவு கூடுதலாக உள்ளதால், சிலர் கத்திரிக்காய் செடிகளை தோட்டத்திலேயே டிராக்டர் வைத்து அழித்துவருகிறார்கள்.
 
கத்திரிக்காய் விலை சரிவால், மூன்று மாதமாக கடினமாக உழைத்த பயிர்களை அழிக்க நேர்ந்த நிலை, விவசாயிகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது, கத்திரிக்காய் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே உள்ளது.
 
இதனால், அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments