திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகில் உள்ள அத்திமஞ்சேரிப்பேட்டை கிராமத்தில், நடக்கவிருந்த திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அத்திமஞ்சேரிப்பேட்டையை சேர்ந்த மணி என்பவருக்கும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் இன்று  திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 
	 
	திருமணத்திற்காக மணமகள் நேற்றே மணமகன் வீட்டில் தங்கிய சந்தியா இன்று காலை மர்மமான முறையில் குளியலறையில் உயிரிழந்து கிடந்தார். மணமகன் வீட்டில் உள்ள குளியலறையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திடீர் துயர சம்பவம் உறவினர்கள் மத்தியிலும் கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
	 
	தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மணப்பெண்ணின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மணமகள் மரணத்திற்கான காரணம் தெரியும் என கூறப்படுகிறது.