தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்கள் நடக்கும் முன்னரே அதைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை திகழவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் அடியோடு அகற்றப்பட வேண்டும்!
போதைப்பொருட்கள் பயன்பாடு எனும் சமூகத்தீமை களையப்படுவதை ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதிசெய்திட வேண்டும்!
பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர கவனம் செலுத்தி, குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதிசெய்திட வேண்டும்!
காவல் நிலைய மரணங்களே இருக்கக்கூடாது; எந்த வழக்கானாலும் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்!
தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்கள் நடக்கும் முன்னரே அதைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை திகழவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.