Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளுக்கு நாள் சட்டம் - ஒழுங்கை சீரழித்துக் கொண்டு வரும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனங்கள்- ஓபிஎஸ்

panner
, திங்கள், 10 ஜூலை 2023 (17:41 IST)
கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்கள் அதிகரிப்பு என சட்ட விரோதமான செயல்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஓ. பன்னீர்செல்வம் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாவது:

‘’ஒரு மாநிலத்தின் பொருளாரதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குவது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்கள் அதிகரிப்பு என சட்ட விரோதமான செயல்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சட்டம்-ஒழுங்கை சீரழித்து வரும் தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்கள் அதிகரிப்பு என சட்ட விரோதமான செயல்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. 

மேலும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்கும் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரை தாக்கும் வகையில் பெட்ரோல் வெடிகுண்டினை வீசியச் சம்பவம் உள்பட அனைத்து கொலைச் சம்பவங்களுக்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும் காரணமானவர்கள்மீது சட்டப்படி வழக்கினை பதிவு செய்து தண்டனை பெற்றுத் தரவேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறைக்கு செல்வதை தவிர்க்க பல்லியை விழுங்கிய நபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை..!