அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்கே மிர்சா பதவி நீட்டிப்பு சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமலாக்கத்துறை இயக்குனராக பணிபுரிந்த சஞ்சய் குமார் மிஸ்ரா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் இரண்டு முறை நீடிக்கப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு மூன்றாவது முறையும் நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் அவரது பதவி காலம் வரும் நவம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையுள்ளது. இந்த நிலையில் அமலாக்க துறை இயக்குனர் எஸ்கே மிஸ்ராவின் பதவி நீடிப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது
இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அமலாக்கத்துறை இயக்குனரின் மூன்றாவது பதவி நீட்டிப்பு சட்ட விரோதமானது என்று கூறியது. இருப்பினும் அவர் ஜூலை 31ஆம் தேதி வரை பதவியில் நீடிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது