Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் மாடு மேய்க்கணும்!. ஆனா இவர் ஈ.சி.ஆர் வீட்ல இருப்பார்!. சீமானை வச்சுசெய்யும் மாறன்.

Advertiesment
seeman

BALA

, திங்கள், 23 பிப்ரவரி 2026 (12:02 IST)
திரைத்துறையிலிருந்து வந்த சீமான் 16 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கினார்.. கட்சி துவங்கியது முதலே ‘தமிழ் தேசியமே எங்கள் கொள்கை.. திராவிடத்தை எதிர்ப்போம்’ என தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும், நாங்கள் திராவிடர்கள் இல்லை.. தமிழர்கள் என முழக்கமிட்டு வருகிறார்.

திராவிட கட்சிகளான திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் சீமான் இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத ஒரு மாற்று வேண்டும் என தொடர்ந்து அரசியல் களத்தில் சொல்லி வருகிறார். மேலும் ‘நான் முதல்வரானால் ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன்.. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்’ என தொடர்ந்து சொல்லி வருகிறார்.. ஒருபக்கம் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது..

மேலும், சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சீமான் அறிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ‘நாம் தமிழர் கட்சியில் 234 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்களை அறிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள். மருத்துவம், பொறியியல், சட்டம் படித்தவர்கள். மக்களை ஆடு, மாடு மேய்க்க சொல்லி நச்சரிக்கும் இவரது கட்சி வேட்பாளர்களில் அதிகமாக இருக்க வேண்டியதே ஆடு, மாடு மேய்ப்பவர்கள்தானே!.. அதுதானே சிறந்த உதாரணமாக இருக்க முடியும்?.

இவரது மகன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிப்பாராம்.. வேட்பாளர்கள் மருத்துவ, சட்ட, பொறியியல் வேலை பார்ப்பார்களாம். இவரும் கிராமத்தில் ஆடு, மாடு மேய்க்காமல் தலைநகரில் உள்ள ECR பங்களாவில் வசிப்பாராம். திரைப்படங்களில் நடிப்பாராம். ஆனால் இதர தமிழக மக்கள் பெற்ற பிள்ளைகள் ஆடு, மாடு மேய்க்க வேண்டுமாம். நல்லா இருக்குய்யா உங்க உருட்டு’ என நக்கலடித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

SIR-க்கு பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளSIR-க்கு பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல்!.. முக்கிய அப்டேட்...ர் பட்டியல்!.. முக்கிய அப்டேட்...