Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

SIR-க்கு பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல்!.. முக்கிய அப்டேட்...

Advertiesment
voters list

Mahendran

, திங்கள், 23 பிப்ரவரி 2026 (11:25 IST)
தமிழகத்தில் 2003ம் வருடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்தது. அதன்பின் 22 வருடங்கள் அது நடக்காமல் இருந்த நிலையில் கடந்த வருடம் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிந்தபின் வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.. அதாவது 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர் அதில் நீக்கப்பட்டிருந்தது.

மேலும் டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில்  விடுபட்டவர்கள் பெயரை சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.. அதன்படி 24.4 லட்சம் பேர் மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தார்கள். அதேபோல் 10 லட்சம் பேர் ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பத்திருந்தனர்.

அந்த விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணி கடந்த 1SIR-க்கு பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல்!.. முக்கிய அப்டேட்...0ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 2:30 மணிக்கு வெளியிடுகிறார்.. இந்த இறுதி பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 மாத கர்ப்பிணியை அடித்து துன்புறுத்திய கணவர்.. கர்ப்பிணி பெண் எடுத்த அதிரடி முடிவு..!