Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொன்மையான தமிழுக்கு இன்னலா?- கொதித்து போன தமிழிசை

Advertiesment
தொன்மையான தமிழுக்கு இன்னலா?- கொதித்து போன தமிழிசை
, வெள்ளி, 26 ஜூலை 2019 (18:03 IST)
தமிழக அரசின் 12வது ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழின் வரலாறு தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தற்போது 12ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் மொழியியல் ஆராய்ச்சியாளர் ஜார்ஜ்.எல்.ஹெர்ட் எழுதிய ”The Status of Tamil as a Classical Language” என்னும் பகுதி இடம் பெற்றுள்ளது. அதில் சமஸ்கிருதம் கி.மு 2000 ஆண்டுகள் பழமையானது என்றும், தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகள் பழமையானது என்றும் உள்ளது. அதாவது தமிழ் மொழி தோன்றுவதற்கு 1700 ஆண்டுகள் முன்பே சமஸ்கிருதம் இருந்ததாக அந்த புத்தகத்தின் கருத்து உள்ளது.

இதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ள நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் இது குறித்த தனது கண்டனங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் “தொன்மைமையுடைய நம் முதுமொழி தமிழ். 300 ஆண்டுகள்தான் பழமைமையானது என்று 12 ம் வகுப்புபாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பதாக, வந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுவன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  உடனே மாற்றப்படவேண்டும், தவறு நடக்காரணமானவர்கள்  மீது  உடனே  நடவடிக்கை  எடுக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

எனினும் அவர் சமஸ்கிருதம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையானது – 12வது பாடத் திட்டத்தால் சர்ச்சை