Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையானது – 12வது பாடத் திட்டத்தால் சர்ச்சை

தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையானது – 12வது பாடத் திட்டத்தால் சர்ச்சை
, வெள்ளி, 26 ஜூலை 2019 (17:46 IST)
தமிழக பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் புதிய பாட புத்தகங்கள் வெளிவந்ததில் இருந்தே அதில் பல்வேறு பிரச்சினைகள் முளைத்துள்ளன. ஏற்கனவே தேசிய கீதம் தவறாக அச்சிடப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. பிறகு பாரதியாருக்கு காவி நிற தலைப்பாகை இருப்பது போல அட்டைப்பட டிசைன் அமைத்தது சர்ச்சைக்குள்ளானது.

தற்போது 12ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் ”The Status of Tamil as a Classical Language” என்னும் தலைப்பில் சமஸ்கிருதம் கி.மு 2000 ஆண்டுகள் பழமையானது என்றும், தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகள் பழமையானது என்றும் உள்ளது. அதாவது தமிழ் மொழி தோன்றுவதற்கு 1700 ஆண்டுகள் முன்பே சமஸ்கிருதம் இருந்ததாக அந்த புத்தகத்தின் கருத்து உள்ளது. மேலும் இந்தியாவின் பழமையான மொழி தமிழ் என்று பல வரலாற்று ஆசிரியர்களே தெரிவித்துள்ளனர்.

இப்படி வரலாற்றை திரித்து தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிவேகத்தில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர் பைக் ! பதவைக்கும் சிசிடிவி காட்சி