Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைமையை மாத்துங்க ; கூட்டணிக்கு ரெடி - எடப்பாடிக்கு ஆப்பு வைக்கும் ரஜினி

Advertiesment
தலைமையை மாத்துங்க ; கூட்டணிக்கு ரெடி - எடப்பாடிக்கு ஆப்பு வைக்கும் ரஜினி
, புதன், 19 செப்டம்பர் 2018 (12:11 IST)
கூட்டணி குறித்து பாஜக மேலிடத்தில் ரஜினி பேசிய டீல் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தொடர்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போது கட்சி நிர்வாகிகளை நியமித்து வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
 
தமிழகத்தில் தனித்து நின்றால் தேறாது என்பதை உணர்ந்த பாஜக மேலிடம், வரும் தேர்தல்களில் அதிமுக-ரஜினி-பாஜக என்கிற கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதுபற்றி ரஜினியிடம் பாஜக மேலிடம் டீல் பேசி வருகிறது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி-ஒபிஎஸ் போன்ற தற்போதையை தலைமையில் எனக்கு உடன்பாடில்லை. மக்களும் அதிருப்தியில் உள்ளனர். எனவே தலைமையை மாத்துங்கள். அப்புறம் கூட்டணிய பத்தி பேசலாம் என ரஜினி கூறிவிட்டதாக தெரிகிறது.
webdunia

 
எனவே, டெல்லியின் அடுத்த குறி கண்டிப்பாக ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியாக இருக்கும் என கருதப்படுகிறது. அதாவது, அவர்களை குறி வைத்து சிபிஐ மற்றும் வருமானவரித்துறை சோதனைகளை நடத்தி  அதிமுக கட்சி மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி, அதன் தொடர்ச்சியாக வேறு தலைமையை நியமித்து, ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என பாஜக திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே மாதத்தில் கருணாநிதியை மறந்த திமுகவினர்