Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.ஜ.க கட்சியின் கதவுகளை தி.மு.க தற்போது தட்டுகின்றது: தம்பித்துரை பேட்டி

பா.ஜ.க கட்சியின் கதவுகளை தி.மு.க தற்போது தட்டுகின்றது: தம்பித்துரை பேட்டி
, செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (20:44 IST)
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தெத்துப்பட்டி ஊராட்சி, ஆலமரத்துப்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பித்துரை பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை., அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலைப்பாடுகள் பல பேர் தற்போது கேட்கின்றார்கள் என்றும், நான் (தம்பித்துரை) தெளிவாக சொல்வது அம்மா (ஜெயலலிதா) வின் கொள்கைகளின் படி தான் நடைபெறும் தேர்தல்களிலும் பின்பற்றும், ஆகவே, 2014 ம் ஆண்டு மக்களவை தேர்தல்களிலும்., 2016 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் அ.தி.மு.க தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற்றது.

ஆகவே, வரும் தேர்தல்களிலும் ஏதாவது கூட்டணி என்றால் அது தலைமை தான் முடிவெடுக்கும், ஆனால் பா.ஜ.க வின் கதவை நாங்கள் (அ.தி.மு.க) கட்சியினர் தட்டுவதாகவும், ஆனால், நாங்கள் யார் கதவையும் தட்டவேண்டிய அவசியம் இல்லை, தற்போது பா.ஜ.க கதவுகளை தட்டுவது தி.மு.க வினர் தான்,

ஆகவே, கலைஞரின் நினைவேந்தல் நடைபெறும் போது, அமித்ஷாவினை அழைத்தார்கள். அதே நேரத்தில், முன்னதாக நடைபெற்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பா.ஜ.க கட்சியினரை அழைக்க வில்லை, ஆனால், திடீரென்று அழைத்ததன் காரணம் என்ன என்று பார்த்தால் தெரியும்,

அதே நேரத்தில், அழகிரியின் பேரணியின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ ரைடு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் வீட்டில் ரைடு என்று நடக்கின்றது. ஆகவே, எங்கள் (அ.தி.மு.க) கட்சியின் மீது களங்கம் ஏற்படுத்த இன்று போராட்டம் நடத்துகின்றார்கள்.

ஆகவே, பா.ஜ.க கட்சியின் கதவை தி.மு.க தட்டுகின்றது. மேலும், மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் உறவு நன்கு இருப்பதாகவும், உள்ளாட்சித்துறைக்கு தேவையான நிதிகளை 1390 கோடி தந்துள்ளார்கள்.

ஆகவே, மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் நல்ல உறவு உள்ளது என்றும் அதே நேரத்தில் அரசியலில் பா.ஜ.க விற்கும் அ.தி.மு.க விற்கும் இப்போது எந்த ஒரு கூட்டணியும் இல்லை, ஆனால் மறைமுகமாக தி.மு.க வினர் பா.ஜ.க வினருடன் செயல்பட்டு கூட்டணி அமைக்க ஏதுவாக இருக்கின்றனர் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடம்பூர் ராஜூவின் மெரீனா பிச்சை குறித்த கருத்துக்கு துரைமுருகன் பதிலடி