Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏற்கனவே சுத்தம்.. இதுல ஹெச்.ராஜா வேற.. கடுப்பில் பாஜக தலைமை

Advertiesment
ஏற்கனவே சுத்தம்.. இதுல ஹெச்.ராஜா வேற.. கடுப்பில் பாஜக தலைமை
, புதன், 19 செப்டம்பர் 2018 (11:44 IST)
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் சமீபத்திய சர்ச்சை பேச்சு பாஜக மேலிடத்திற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
விநாயகர் சதுர்த்தி தொடர்பான விழாவிற்கு போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, காவல் துறை மற்றும் நீதிமன்றத்திற்கு எதிராகவும், விமர்சித்தும் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. 
 
ஆனால், பாஜக மேலிடத்தின் அழுத்தத்தால் தமிழக அரசு இன்னும் அவரை கைது செய்யவில்லை என ஏற்கனவே செய்தி வெளியானது. ஆனால், இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அக்டோபர் 3ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சிபிஐ ரெய்டின் காரணமாக கோபத்தில் ஹெச்.ராஜாவை கைது செய்து டெல்லிக்கு அதிர்ச்சி கொடுக்க நினைத்த முதல்வர் எடப்படி தரப்பு தொடக்கத்தில் வழக்குப்பதிவு செய்து வேகம் காட்டினாலும், பாஜக தலைமைக்கு கட்டுப்பட்டு பின் வாங்கிவிட்டது. அதேநேரம், விஷயம் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டதால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என முதல்வர் தரப்பு கருதுகிறது.
webdunia

 
இது ஒருபுறம் எனில், ஹெச்.ராஜா தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருவதை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை. ஏதேனும் செய்து பாஜகவின் இமேஜை தமிழ்நாட்டில் ஒரு அடி ஏற்றினால்,  ஹெச்.ராஜா ஏதேனும் பேசி 10 அடி கீழே கொண்டு வந்து விடுகிறார் என டெல்லி பாஜக கருதுகிறதாம். இவர் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் தாமரை எந்த காலத்திலும் மலராது என தமிழகத்தின் மூத்த பாஜக பிரமுகரே டெல்லியிடம் கோபமாக கூறினாராம். ஹெச்.ராஜா பேச்சால் பாஜகவிற்கு ஏற்படும் பின்னடைவு பற்றி உளவுத்துறை கொடுத்த அறிக்கையும், பாஜக மேலிடத்தை கவலை அடைய செய்துள்ளது.
 
நான் அப்படி பேசவில்லை. நான் பேசியதை யாரோ எடிட் செய்து விட்டனர் என ராஜா கூறியிருக்கிறார். ஆனால், அது உண்மையான பேச்சு என நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை கண்டிப்பாக நிரூபித்துவிடும். எனவே, கைதுக்கு ஹெச்.ராஜா தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. 
 
நீதிமன்றத்தின் நடவடிக்கையின் படி ஹெச். ராஜா  கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்த மருத்துவர் கைது