Publish Date: Wed, 23 Jun 2021 (17:05 IST)
Updated Date: Wed, 23 Jun 2021 (17:06 IST)
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் திடீரென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இன்று நீட் தேர்வு குறித்து ஆவேசமாக சட்டப்பேரவையில் விவாதம் நடந்த நிலையில் அது குறித்து தமிழக கவர்னரிடம் மனு அளிக்க பாஜக எம்எல்ஏக்கள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று சந்தித்துள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் சற்றுமுன் ஆளுநரை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் பாஜக மாநில தலைவர் எல் முருகன் பொதுச் செயலாளர் கேடி ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுனரை சந்தித்தபின் பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.