பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கினால் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டுவேன் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி குறித்து கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன் திமுக நடத்திய சமூகநீதி மாநாட்டில் சமூகநீதி பற்றிய பாடத்தை முதல்வர் கூறி இருக்கிறார். தந்தை கருணாநிதிக்கு பிறகு மகன் ஸ்டாலின் தலைவர் ஆகிவிட்டார். அரை நூற்றாண்டு கடந்தும் அந்த உதவிக்கு பெயர் அளவில் கூட வேட்புமனு தாக்கல் செய்யக்கூட யாரையும் அனுமதிக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் என்றாவது ஒருநாள் கருணாநிதி குடும்பத்தை சாராத ஒருவர் முதல்வராக வர முடியுமா? சமூக நீதியை ஓரளவுக்கு நடைமுறைப்படுத்த முதல்வர் முடிவு செய்தால் துணை முதல்வராக பட்டியல் இணையத்தைச் சேர்ந்த ஒருவரை நியமனம் செய்வாரா? அவ்வாறு நியமனம் செய்தால் அவரை நான் வீடு தேடி சென்று பாராட்ட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.