ஐநா அமைப்பில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் பணிபுரிய தடை விதிப்பதாக தாலிபான்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அரசு நடைபெற்று வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு சுதந்திரங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஐநா அமைப்பில் பெண்கள் பணிபுரிய ஆப்கானின் தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. ஐநாவில் உள்ள மருத்துவத்துறையில் பெண்கள் மிக அதிக அளவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஐநா அமைப்பில் செயல்படும் பெண் ஊழியர்களுக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இதனை உத்தரவாக பிறப்பிக்காமல், வாய்மொழி உத்தரவாக தாலிபான்கள் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.