இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.
இந்நிலையில் அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து மக்களை காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் “மிதமிஞ்சிய வெப்பத்துக்கு ஏற்ப ஆஸ்பத்திரிகள் வசதிகளை பெருக்க வேண்டும். குளிரூட்டும் சாதனங்கள் இயக்க தடையற்ற மின்சார வினியோகம், சோலார் தகடுகளை நிறுவுதல், உட்புற வெப்பநிலையை குறைக்க குளிரூட்டும் கூரைகள், ஜன்னல் மறைப்புகள் ஆகியவற்றை நிறுவ வேண்டும்.
மேலும் வெப்பத்தால் ஏற்படும் தோல் வியாதிகளை சரிசெய்ய தேவையான மருந்துகள், ஐவி திரவம் உள்ளிட்டவை போதிய அளவில் கையிருப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது