Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் மாநில ஆளுனராக இல.கணேசன் பதவியேற்பு!!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:03 IST)
மணிப்பூர் மாநில ஆளுனராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பதவியேற்றுக்கொண்டார். 
 
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராகவும், எம்.பியாகவும் பதவி வகித்தவர் மூத்த தலைவர் இல.கணேசன். முன்னதாக பாஜக தலைவர்களாக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் உள்ளிட்டவர்களுக்கு மாநில ஆளுனர், இணையமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டன.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கும் மணிப்பூர் மாநில ஆளுனராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனிடையே மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவியேற்றுக்கொண்டார். இவர், தமிழக பாஜக தலைவராக, பாஜகவின் தேசிய துணைத் தலைவராக, ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெறுவாரா விஜய பிரபாகரன்..? கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தேர்தலில் அதிமுக வாஷ் அவுட்..! இரட்டை இலக்கில் பாஜக..! ஷாக் எக்சிட் போல் முடிவு..!!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தோல்வி.? கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி..!!

Exit Poll 2024 Live: இந்தியாவில் ஆட்சியமைக்கப்போவது யார்? மீண்டும் பாஜகவா? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments