உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தியதை அடுத்து இந்த இட ஒதுக்கீடுக்கு மருத்துவ படிப்பில் அனுமதி இல்லை என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ படிப்பில் வழங்கப்படுவது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது
மருத்துவ படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே மத்திய அரசு இதனை செயல்படுத்த முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது