கரூரில் பாஜக தன் விளையாட்டை தொடங்கிவிட்டது! - திருமாவளவன் குற்றச்சாட்டு!

Prasanth K
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (12:32 IST)

தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ள எம்பிக்கள் குழு இன்று கரூர் செல்லும் நிலையில் அதை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

 

கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடிகை எம்.பி ஹேமமாலினி தலைமையில் எம்பிக்கள் குழு இன்று விசாரணைக்காக கரூர் வந்துள்ளனர்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் “கரூர் கொடுந்துயரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை நேரடியாக தொடங்கியுள்ளது. கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி ஆராய குழு அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே. காங்கிரஸும் இவ்வாறான உண்மை அறியும் குழுவை நியமித்து கரூர் அனுப்ப வேண்டும்.

 

கரூர் விஷயத்தில் பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சி தலையிட வேண்டும். தமிழ்நாடு அல்லாத பிற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை ராகுல்காந்தி அமைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments