Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று வெளியாகுமா தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் ?

இன்று வெளியாகுமா தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் ?
, சனி, 16 மார்ச் 2019 (08:31 IST)
இன்று நடக்கவுள்ள மத்திய தேர்தல் குழு கூட்டத்துக்குப் பிறகு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 18 முதல் மே 21 வரை நடக்கின்றன. தேர்தலுக்கான முடிவுகள் மே 23 அன்று வெளியிடப்பட இருக்கின்றன.  ஆளும் கட்சியான பாஜக ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் தங்கள் கூட்டணியை உறுதி செய்து தொகுதி ஒதுக்கீட்டுகளை முடிவு செய்வதில் தீவரம் காட்டி வருகிறது.

இன்று பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு முதல் கட்ட தேர்தல்கள் நடக்கும் தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முதல்கட்ட வாக்குப்பதிவில் உள்ள ஒரு மாநிலம் என்பதால் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை எஸ் பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு