Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்முனை தாக்குதலில் தினகரன்: போட்டியிடுவதை கைவிடுவாரா?

மும்முனை தாக்குதலில் தினகரன்: போட்டியிடுவதை கைவிடுவாரா?
, வெள்ளி, 15 மார்ச் 2019 (19:31 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக கூட்டணிகள் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி ஆமை வேகத்தில் கூட செல்லவில்லை. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்தாலும் இன்னும் விருப்பனு அளித்தல் உள்பட எந்தவித ஆரம்பகட்ட பணியும் நடைபெறுவதாக தெரியவில்லை
 
இந்த நிலையில் தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் சதி செய்வதாக அவரது தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்த வழக்கு ஒன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகாததால் மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றுதான் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியும். ஆனால் அதற்கு அடுத்த நாள் மார்ச் 26ஆம் தேதிதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த் தேர்தலில் தினகரன் கட்சி போட்டியிட வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பாஜக பிரமுகர் ஒருவர் கூறியுள்ளதாகவும் இதனை சசிகலா, தினகரனின் கூற அதற்கு தினகரன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் தினகரன் கட்சியில் உள்ள முக்கியமானவர்களுக்கு அதிமுக தலைமை வலைவிரித்து வருவதாகவும் தேர்தலுக்கு முன் அதிமுகவுக்கு வருபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்ற ஆசை வார்த்தைகள் தரப்படுவதாகவும் செய்திகள்
webdunia
கூறுகின்றன.
 
எனவே தேர்தல் ஆணையம், பாஜக, அதிமுக என மும்முனைகளில் இருந்து வரும் தாக்குதல்களை தினகரன் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: எஸ்பி மீது அதிரடி நடவடிக்கை; கடமையை செய்த நீதிமன்றம்