தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது என தமிழக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக பல கட்சிகள் குற்றம் சாட்டி பேசி வருகின்றன.
இதுகுறித்து பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது. ஏ.ஆர்.ரஹ்மான் தமிழை இணைப்பு மொழி என கூறியதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு குறித்து பேசிய அவர், இந்த நுழைவு தேர்வால் தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.