Publish Date: Wed, 21 Jun 2023 (12:14 IST)
Updated Date: Wed, 21 Jun 2023 (12:46 IST)
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சீரியல் நடிகை ரக்சிதா தனது கணவர் தினேஷ் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது கணவர் செல்போனில் ஆபாச மெசேஜ்களை அனுப்புகிறார் என்றும் கால் செய்து மிரட்டுகிறார் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிக் பாஸ் ரக்சிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தினேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சமீப காலமாக இருவரும் தெரிந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென மாங்காடு காவல் நிலையத்தில் தனது கணவர் ஆபாச மெசேஜ் அனுப்புவதாக ரக்சிதா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகார் குறித்து ரக்சிதா கணவர் தினேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.