Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இணையும் பியார் பிரேமா காதல் கூட்டணி… கவின் நடிக்கும் அடுத்த பட அப்டேட்!

மீண்டும் இணையும் பியார் பிரேமா காதல் கூட்டணி… கவின் நடிக்கும் அடுத்த பட அப்டேட்!
, சனி, 10 ஜூன் 2023 (08:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து சமீபத்தில் அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இளம் நடிகர்களுக்கு பஞ்சம் இருக்கும் நிலையில் இப்போது அதிகளவில் கவினுக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

ஏற்கனவே டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசையமைக்கும் படத்தில் கவின் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இப்ப்போது பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் இளன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு யுவன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இளன் மற்றும் யுவன் கூட்டணியில் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய சார்ட்பஸ்டராக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் சாலை விபத்தில் மரணம்!