Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் ஒரு படம் கூட ஹிட் இல்ல… அதுகுள்ள துருவ் விக்ரம் சம்பளம் இத்தனை கோடிகளா?

இன்னும் ஒரு படம் கூட ஹிட் இல்ல… அதுகுள்ள துருவ் விக்ரம் சம்பளம் இத்தனை கோடிகளா?
, திங்கள், 29 மே 2023 (06:53 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து இப்போது அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்துள்ளார். படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்துக்குப் பிறகு இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக துருவ் விக்ரம் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்து அதில் ஒன்றை கூட ஹிட் கொடுக்காத துருவ் விக்ரமுக்கு இத்தனைக் கோடி சம்பளமா என கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் விடாமுயற்சியில் இவர்தான் ஹீரோயின்… இன்னும் சில நாட்களில் அறிவிப்பு!