பெங்களூர் முதல் ஓசூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படாது என கர்நாடகா அரசு கைவிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு-ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம், தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என்று பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் கர்நாடகா அரசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை கர்நாடகா அரசு தமிழக அரசிடமும் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓசூர் முதல் பொம்மசந்திரா வரையிலான வழித்தடத்தை இணைக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முன்மொழிந்ததாகவும், ஆனால் இந்த இணைப்புக்கு சாத்தியமில்லை என்று பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், பெங்களூரு மெட்ரோ முழுவதும் 750 DC மின் இழுவை (750 DC traction power) மூலம் இயங்குவதே ஆகும். இதனால், இணைப்பு சாத்தியமில்லை என்று பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
மேற்கண்ட தொழில்நுட்பச் சிக்கல்களின் காரணமாக, பெங்களூரு முதல் ஓசூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் தற்போது கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாகவே கருதப்படுகிறது.