Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப்ளாக்கில் டிக்கெட் விற்ற விஜய் இயக்க நிர்வாகி! – சென்னையில் பரபரப்பு!

ப்ளாக்கில் டிக்கெட் விற்ற விஜய் இயக்க நிர்வாகி! – சென்னையில் பரபரப்பு!
, வியாழன், 14 ஏப்ரல் 2022 (13:12 IST)
சென்னையில் விஜய்யின் பீஸ்ட் பட டிக்கெட்டை ப்ளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். நேற்று வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் காரணமாக நன்றாக ஓடி வருகிறது.

இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் திரையரங்குக்கு மக்கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வேல்முருகன் என்பவர் ஜாபர்கான் பேட்டையில் உள்ள திரையரங்கில் பீஸ்ட் பட டிக்கெட்டுகளை ப்ளாக்கில் விற்று வந்தபோது போலீஸில் பிடிபட்டுள்ளார்.

அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 137 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுனரின் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும்! – ஜெயக்குமார் உறுதி!