Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

Siva
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (16:45 IST)
காஷ்மீரில் நடந்த தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடந்த தாக்குதல் மாதிரி தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 370 சட்டப்பிரிவை நீக்கினால் ஜம்மு காஷ்மீரில் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என பாஜக கூறியது. அங்கு சுற்றுலா செல்லலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. அதனை நம்பி மக்கள் சுற்றுலா சென்ற நிலையில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
 
மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் பதவி விலகியது மாதிரி  இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.
 
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை, மாறாக அதை தீவிர படுத்துவதற்கு தான் பயன்பட்டது. எனவே, காஷ்மீரில் நடந்துள்ள இந்த தாக்குதல் மத்திய அரசுக்கு எதிரான தாக்குதலாகவே எண்ண வேண்டி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments