Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக எதிர்க்கட்சியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! அருள் ஆறுமுகம்

Advertiesment
திமுக எதிர்க்கட்சியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! அருள் ஆறுமுகம்

Mahendran

, சனி, 20 ஜனவரி 2024 (17:13 IST)
திமுக ஆளும் கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
 திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது என்றும் ஏனென்றால் எதிர்கட்சியாக இருந்த போது எட்டு வழிச்சாலைக்கு எதிராக அவ்வளவு தீவிரமாக போராடியது திமுக தான் என்றும் தெரிவித்தார். 
 
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக என்றும் ஆளுங்கட்சியானதால் திமுக அரசு விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்டுள்ளது என்றும் அவர் கூறினார் 
 
மேலும் தான் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டாரா இல்லை வேறு ஏதேனும் ஆட்சி நடத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுதுவது என்றும் சிப்காட்டுக்கு எதிராக போராடியதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: தமிழன் பிரசன்னா