Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Advertiesment
buses

Sinoj

, சனி, 20 ஜனவரி 2024 (14:43 IST)
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

’’அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைக்கேற்ப புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனக் கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் அறிவித்தேன்.

அதன்படி, ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 BSVI பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன். எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்