Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செய்தியாளரின் கேள்விகளை கொச்சைப்படுத்தும் அண்ணாமலைக்கு WJUT கடும் கண்டனம்!

Advertiesment
annamalai

Sinoj

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (18:55 IST)
செய்தியாளரின் கேள்விகளை கொச்சைப்படுத்தியதாக  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு WJUT கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு  உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செய்தியாளரின் கேள்விகளை கொச்சைப்படுத்தும் அண்ணாமலைக்கு  W]UT கடும் கண்டனம்.

"தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்" மாநிலத் தலைவர் அ.ஜெ. சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா.பிரதீப்குமார், மாநில பொருளாளர் இரா ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நேற்றைய தினம் "நியூஸ் 18 தமிழ்நாடு" தொலைக்காட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்கள் நேர்காணல் நடத்தினார்.'

அது சம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்களின் கேள்விகளை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை கொண்டும்,பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க போன்ற மாதிரியான கேள்விகளை கேட்டார் என மிகவும் தரம் தாழ்த்தி கூறியுள்ள சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற அநாகரிகமான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்த அண்ணாமலையின் செயலுக்கு "தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்" தமது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது ‘’என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேலோ-2024 தொடக்க விழா: கனவு நனவாகிய தருணம் இது!- அமைச்சர் உதயநிதி