Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜகா வாங்கிய ரஜினியால் பல்டி அடித்த அர்ஜூன் சம்பத்!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:47 IST)
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் ரஜினி கட்சி துவங்குவதாக அறிவித்த போது அர்ஜூன் சம்பத், 234 தொகுதிகளிலும் ரஜினி கைகாட்டும் வேட்பாளர் வெற்றி பெற இந்த ஆன்மிக அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது. திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வெல்ல வேண்டும். தமிழகத்தில் திராவிட அரசியலுக்கும், ஆன்மிக அரசியலுக்குமான போட்டியில் ஆன்மிக அரசியல்தான் வெல்லும். 
 
பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிட்டாலும் மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்பதே இந்து மக்கள் கட்சியின் திட்டம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம் என தெரிவித்தார். 
 
ஆனால் இப்போது ரஜினி அரசியல் கட்சி துவங்கப்போவது இல்லை என அறிவித்ததால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது தொடர்பாக மதுரையில் நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது என சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments