ரஜினி மக்கள் மன்றத்தினர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நம் மக்கள் தலைவர் ரஜினியின் உண்மையான காவலர்கள் யாரரும் வரும் 10-01-21 ஆம் தேதி அன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து சென்னை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே அவர் தான் அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவரது இந்த மனமாற்றத்திற்கு உடல்நிலை காரணமாக இருந்தாலும், அவரது நெருங்கிய நண்பர்களான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு மற்றும் சிரஞ்சீவி இருவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டி அவரது தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது ரசிகர்கள் ரஜினி வீட்டின் முன் நின்று குரல் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ரஜினியின் நிலைப்பாட்டை எதிர்த்து, வரும் 10-01-21 அன்று நடைபெறும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனதகவல் வெளியானது.
தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நம் மக்கள் தலைவரின் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.21 ஆம் தேதி அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட பகுதி பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையானகாவலர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது மீறி கலந்து கொள்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என என்று கூறியுள்ளார்.