Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேல் யாத்திரை எதிரொலியா தைப்பூசத்திற்கு விடுமுறையா?

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:11 IST)
தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி என எல்.முருகன் டிவிட். 

 
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்பட பல பண்டிகைகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு பொது விடுமுறை விடுத்துள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் தைப்பூசத்துக்கு பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்பட இருப்பதை அடுத்து அன்றைய தினம் பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்து இந்த ஆண்டு மட்டுமன்றி இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா அன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
 
இதனிடையே, பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு வேல் படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாஜக தமிழகம் முழுவதும் வேல் யாத்திரையை நடத்தி தற்போது தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்துள்ளது எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்படுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments