Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசியலில் சினிமா…. முட்டாள்கள் அதிகமாகிவிட்டனர்- ஹெச்.ராஜா

Advertiesment
தமிழக அரசியலில் சினிமா…. முட்டாள்கள் அதிகமாகிவிட்டனர்- ஹெச்.ராஜா
, திங்கள், 4 ஜனவரி 2021 (16:30 IST)
திமுக என்றாலே பிரியாணிக் கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காததுதான் நினைவுக்கு வருகிறது என பாஜக கட்சியின் மூத்ததலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அதன் கூட்டணிக்கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றம்சுமத்தி விமர்சனங்கள் கூறி வருகின்ற்னர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் ‘திமுக ஆட்சி அமைத்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’ என அறிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள பாஜகவைச் சேர்ந்த ஹெச் ராஜா ‘கல்விக் கடனை ரத்துச் செய்வாராம் ஸ்டாலின். எது மத்திய அரசின் அதிகாரம் எது மாநில அரசின் அதிகாரத்தில் வருகிறது என்பதே தெரியாத இவர் எம்மாதிரி நிர்வாகத்தை தருவார் என்று கற்பணை செய்து பார்க்கவே முடியவில்லை. தபால் கட்டணம் குறித்தும் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.ஆண்டவா தமிழகத்தை காப்பாற்று’ எனக் கூறியிருந்தார்.

மேலும், ஹெச் ராஜா தனது பேட்டியில் கூறியுள்ளதாவது :

திமுக என்றாலே பிரியாணிக் கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காததுதான் நினைவுக்கு வருகிறது; திராவிடக் கட்சிகளால் இளைஞர்களின் மூளையில் அழுக்குப் படிந்துள்ளதாகவும், தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முட்டாள்கள் அதிகமாகிவிட்டனர் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.எஸ்.பியான மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை… வைரலாகும் புகைப்படம்