திருநெல்வேலி அருகே திசையன்விளை பகுதியில் பள்ளி மாணவன் ஒருவன் பையில் கத்தியை வைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்பட்டுள்ளான். அதை கண்ட வகுப்பாசிரியர் மாணவனின் புத்தக பையை பார்த்தபோது அதில் ஒரு நீண்ட கத்தி இருந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த அவர்கள் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அதில் ஏற்கனவே பள்ளியில் உள்ள சக மாணவன் ஒருவனோடு தகராறு இருந்ததும், அந்த மாணவன் முன்னதாக கத்தியை காட்டி மிரட்டியதால் பதிலுக்கு இந்த மாணவனும் கத்தியை எடுத்து வந்திருப்பதும் தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கிவிட்டு போலீஸார் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்கள் இடையே ஆயுத கலாச்சாரம் அதிகரிப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K