Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம்; மாணவர் மரணம்! – அரக்கோணத்தில் பரபரப்பு!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (10:36 IST)
பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணிப்பது சமீபகாலமாக சர்ச்சைக்குள்ளாகி வந்த நிலையில் அரக்கோணத்தில் படிக்கட்டில் பயணித்த மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிப்பது பெரும் விவாதமாகியுள்ளது. சில இடங்களில் மாணவர்கள் பேருந்து படிகட்டுகளில் நின்றபடி ஆபத்தான சாகசங்களை மேற்கொள்வது கண்டிக்கப்படும் நிலையில், சில இடங்களில் பேருந்தில் கூட்டம் காரணமாக மாணவர்கள் படிகளில் தொங்கி செல்லும் நிலையும் உள்ளது.

சமீபத்தில் இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் மாணவர்கள் படிகளில் நின்றபடி பயணிக்காமல் இருப்பதை பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அரக்கோணத்தில் பேருந்து படியில் தொங்கியபடி சென்ற தினேஷ்குமார் என்ற மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 மாநிலங்கள் ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!