Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளார்ந்த அன்புடன் பழகும் நண்பர்! – ரஜினிக்கு முதல்வர் வாழ்த்து!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (09:24 IST)
நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் துணை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் மிக முக்கியமான நடிகராகவும், அதிகமாக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் உயர்ந்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ” உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசு அனுமதித்தால் மாணவர்களுக்கு தடுப்பூசி! – அன்பில் மகேஷ் தகவல்!