Publish Date: Tue, 24 Mar 2026 (15:41 IST)
Updated Date: Tue, 24 Mar 2026 (15:43 IST)
தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவில் பல மாநிலங்களிலும் சாதி பாகுபாடு பார்ப்பது என்பது இப்போதும் இருக்கிறது. என்னதான் பள்ளிக்கூடத்திலும், கல்லூரிகளும், திரைப்படங்களிலும், கதைகளிலும், திரைப்பட பாடல்களிலும், மேடை பேச்சுக்களிலும் சாதி மறுப்பு கொள்கையை பேசினாலும் சாதி உணர்வு என்பது பலரிடமும் ஊறி போய் கிடக்கிறது.
அதுவும், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் சாதிய பாகுபாடு என்பது மிகவும் அதிக அளவில் இருக்கிறாது. சில திரைப்பட இயக்குனர்கள் நான் சாதிக்கு எதிராக படம் எடுக்கிறேன் என சொல்லி படம் எடுக்க வருகிறார்கள். மாரி செல்வராஜ் அதில் முக்கியமானவர். சாதிய படமெடுப்பவர் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. என் சமூகம் சந்தித்த பிரச்சனைகளை நான் எனது திரைப்படங்களில் தொடர்ந்து பேசுவேன் என சொல்லி வருகிறார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது சாதிப்பாகுபாடு பற்றி பேசியிருக்கிறார். இன்னமும் சில கிராமங்களில் நீ கீழ... நான் மேலே என கொடுமை நடந்துகிட்டுதான் இருக்கு.. ஆனா நீங்க முன்னுக்கு வரணும்னா அதையெல்லாம் தாண்டிதான் வரணும்.. நல்லா படிச்சு மேல வரணும்.. அத பண்ணா வெற்றி தானா கிடைக்கும்.
ஒருத்தன் ஜெயிச்சுட்டா எவனும் சாதி பார்க்க மாட்டான்.. அதை விட்டுட்டு நான் இந்த சாதி என்ன அமுக்குறாங்கன்னு சொல்லக்கூடாது.. நீ எதையாவது பண்ணி அவங்க லெவலுக்கு மேல வந்து அவனை எட்டி உதை.. சிலருக்கு ஒரு வருஷம் ஆகலாம்.. சிலருக்கு 10 வருஷம் கூட ஆகலாம்.. நேரம் எடுக்கும்.. எல்லாருக்குள்ளும் ஒரு வெற்றி வீரன் இருக்கான்.. அதை வெளியே கொண்டு வரணும் என பேசியிருக்கிறார்.