Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புகையிலை மற்றும் போதை பொருட்கள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு இளம் மாணவ,மாணவிகளுக்கு அவசியம் - மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன்!

புகையிலை மற்றும் போதை பொருட்கள்  தீமைகள் குறித்த விழிப்புணர்வு இளம் மாணவ,மாணவிகளுக்கு அவசியம் - மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன்!

J.Durai

, புதன், 29 மே 2024 (17:28 IST)
கோவையில்  சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட், பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் இல்லத்தில் வசிக்கும்  குழந்தைகள் புகையிலை மற்றும்  போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,அதிலிருந்து வெளிவரிவது குறித்து தத்ரூப   நாடகம், மற்றும் நடனங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பேசினார்.அப்போது பேசிய அவர்,தற்போது திரையரங்குகளில் திரைப்படத்திற்கு முன்பாக காட்சியிடும் புகையிலை   பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த காட்சியில் காட்டப்படும் படங்கள் மிகுந்த பயத்தை ஏற்படும் வகையில் இருப்பதாக சிலர் தெரிவிப்பதாக கூறிய அவர்,ஆனால் அது போன்ற பயத்தை ஏற்படும் காட்சிகளை  சிறுவயது மாணவர்கள் பார்ப்பதால் புகையிலை  பொருள் பயன்பாட்டால் ஏற்படும்  தீமைகள் குறித்த   விழிப்புணர்வு அதிகரப்பதாக சுட்டி காட்டினார்.தொடர்ந்து பேசிய அவர்,போதை பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஏற்பட்ட  புற்றுநோயாளிகள் படும் துன்பங்களை நேரடியாக  மருத்துவமனைக்கு அழைத்து சென்று   மாணவர்கள் பார்ப்பது கூட ஒரு வகையில் விழப்புணர்வு ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்..போதை பொருட்களே ஒழித்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதாக கூறிய அவர்,போதை பொருட்கள் பழக்கம்,அதனை தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவது என ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளதை சுட்டி காட்டிய அவர், போதை பொருட்களை ஒழித்தாலே குற்றம் குறைவதோடு உடல் நலனும் நன்றாக இருக்கும் என கூறினார்.. புகையிலை ஒழிப்பு தின   விழப்புணர்வு நிகழ்ச்சிகளை  பள்ளிகளில் அதிகம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.
 
நிகழ்ச்சியில், , ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி, கௌரி உதயந்திரன், மருத்துவர்கள்  ஹேமா ,விஷ்ணு மற்றும் கோவை புதூர் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள்  ஜீவானந்தம்   குணசீலன்,மற்றும் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி..! குற்றாலத்தில் அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும்.!