டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஜாமின் பெற்று வெளியான நிலையில் இன்று அவர் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் நேற்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் இன்று அவர் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக நடத்துவது போன்ற ரோட்ஷோ டெல்லியில் நடைபெற இருப்பதாகவும் இந்த வாகன பேரணியில் அரவிந்த் மற்றும் அவரது மனைவி சுனிதா உள்பட ஆம் ஆத்மி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது
மேலும் பாஜக வலிமையான உள்ள தொகுதிகளுக்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் பாஜக தன்னை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்பதை அவர் உருக்கமாக பேச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளிவந்து தீவிரமாக பிரச்சாரம் செய்வது பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.